Search This Blog

Tuesday, May 12, 2020

குதம்பை சிவசித்தர் வாட்ஸாப் குழு


🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*இறைவனின் பரிபூரண அருளை பெற இனைவீர்*
*குதம்பை சிவசித்தர் இப்போது யூடியூப் சேனலில்*
*குதம்பை சிவசித்தர் வாட்ஸாப் குருப்பு*
*குருப்பு 16*
*குருப்பு 15*
*குருப்பு 14*
*குருப்பு 13*
*குருப்பு 12*
*குருப்பு 11*
*குருப்பு 10*
*குருப்பு 9*
*குருப்பு 8*
*குருப்பு 7*
*குருப்பு 6*
*குருப்பு 5*
*குருப்பு 4*
*குருப்பு 3*
*குருப்பு 2*
*குருப்பு 1*
*குதம்பை சிவசித்தர் குருப்பு டெலகிராமில் சேரலாம்*
*பகிர்வு
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

Saturday, October 26, 2019

சிவராத்திரி - கண சித்தர் அருளிய சிவராத்திரி சக்தி வாய்ந்த பூஜை முறை



ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற நன்மை மற்றும் தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும். அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான் செய்த  தீய வினைகளை நீங்க வேண்டும் என்று, கீழே கூறப்பட்டுள்ள சித்தர் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க  வேண்டும்.

மந்திரம்


தேவாய மஹாதேவாய
ஸோமாய பரமாத்மநே

 விச்வேச்வராய ருத்ராய
விரூபாக்ஷாய ஸஹஸ்ரபதேயே நமஹ.

பூஜை முறை


இந்த பூஜையை சிவராத்திரி அன்று மாலையில் செய்ய வேண்டும்.

 பூஜை அறையில் வாழைத்தண்டு திரியில் நல்லெண்ணெய் தீபமெற்றி, 16 காசுகளை ( 1 ரூபாய் காசோ  2, 5 ரூபாய் காசோ ஏதாவது ஒன்றை 16 காசுகள்) கையில் வைத்துக்கொண்டு பூஜை அறையில் தட்டில் இந்த மந்திரத்தை 16 தடவை  சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். (மந்திரத்தை 1 முறை சொல்லும் போது ஒரு காசு போட வேண்டும்) நைவேத்தியமாக கற்கண்டு மற்றும் வாழைப்பழம் வைக்க வேண்டும்.

பின்னர் இந்த சிவ மந்திரத்தை 108 முறை 
சொல்ல வேண்டும்.

மந்திரம்


ஓம் சிவய நம

 இந்த பூஜையை நாம் செய்தால், ஈசன் மனமகிழ்ந்து, நம் வினைகளை களைந்து, ஈசன் நமக்கு வாழ்வில் வளங்களை கொடுப்பார்.

சிவராத்திரி பூஜை செய்து வாழ்வில் வளம் பெறுவோம்.


Thursday, October 24, 2019

ஐப்பசி தேய்பிறை வெள்ளி பிரதோஷம் – இதை தவறாமல் நாம் செய்து மிகுந்த பலன் பெறுவோம்.

முன்னோர்கள் சொல்லிய படி,
சிவ சிவ என்றிடத் முன் ஜென்ம வினையாவும் போக்கிடும் என்பது திருமூலர் வாக்கு. தேய்பிறை பிரதோஷ காலத்தில் சிவபெருமானை சரண் புகுவோர் வாழ்வில் துயரங்கள் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள்.

தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ காலத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில்  சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து சிவபெருமான், நந்தி பகவான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.

நந்தி தேவருக்கு அருகம்புல், வெல்லம் கலந்த அரிசியையும், சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு அரிசி மாவு, பால், பன்னீர், இளநீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை கொடுக்க வேண்டும். 

பூக்களில் செவ்வரளி மற்றும் வில்வ இலை கொடுக்க வேண்டும்.

ஐந்து நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கின் தீபம் வடதிசையில் இருக்க வேண்டும்.

பிரதோஷ வேளையில் இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

மந்திரம்


மவசிவ


இந்த மந்திரத்தை பிரதோஷ காலம் முடியும் வரை ஜபிக்க வேண்டும்.

பலன்கள்

குடும்ப ஒற்றுமை, எதிர்மறை எண்ணங்கள் விலகுதல் மற்றும் செல்வ செல்வாக்கு வந்து சேரும்.

வெள்ளி பிரதோஷம்



சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். சுக்கிரனுக்கு 3 விளக்கு ஏற்ற வேண்டும்.


பலன்கள்

உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.


இறைவனின் அருளை பெற்று யாவரும் நலமுடன் வாழ்க!!!

Tuesday, August 6, 2019


பிள்ளையார் துதி



கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.