Search This Blog

Saturday, October 26, 2019

சிவராத்திரி - கண சித்தர் அருளிய சிவராத்திரி சக்தி வாய்ந்த பூஜை முறை



ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற நன்மை மற்றும் தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும். அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான் செய்த  தீய வினைகளை நீங்க வேண்டும் என்று, கீழே கூறப்பட்டுள்ள சித்தர் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க  வேண்டும்.

மந்திரம்


தேவாய மஹாதேவாய
ஸோமாய பரமாத்மநே

 விச்வேச்வராய ருத்ராய
விரூபாக்ஷாய ஸஹஸ்ரபதேயே நமஹ.

பூஜை முறை


இந்த பூஜையை சிவராத்திரி அன்று மாலையில் செய்ய வேண்டும்.

 பூஜை அறையில் வாழைத்தண்டு திரியில் நல்லெண்ணெய் தீபமெற்றி, 16 காசுகளை ( 1 ரூபாய் காசோ  2, 5 ரூபாய் காசோ ஏதாவது ஒன்றை 16 காசுகள்) கையில் வைத்துக்கொண்டு பூஜை அறையில் தட்டில் இந்த மந்திரத்தை 16 தடவை  சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். (மந்திரத்தை 1 முறை சொல்லும் போது ஒரு காசு போட வேண்டும்) நைவேத்தியமாக கற்கண்டு மற்றும் வாழைப்பழம் வைக்க வேண்டும்.

பின்னர் இந்த சிவ மந்திரத்தை 108 முறை 
சொல்ல வேண்டும்.

மந்திரம்


ஓம் சிவய நம

 இந்த பூஜையை நாம் செய்தால், ஈசன் மனமகிழ்ந்து, நம் வினைகளை களைந்து, ஈசன் நமக்கு வாழ்வில் வளங்களை கொடுப்பார்.

சிவராத்திரி பூஜை செய்து வாழ்வில் வளம் பெறுவோம்.


No comments:

Post a Comment